
ஆசிரியராக வேண்டும் என்பதே பலருடைய கனவாகவுமே இருக்கிறது. ஆசிரியராவதற்கு கல்வி தகுதி என்பது மிகவும் முக்கியம். மூன்று வருட பட்டப்படிப்பு முடித்து அதன் பிறகு ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினால் இரண்டு வருடங்கள் அதாவது முதுகலை பட்டம் முடித்தவர்கள் ஆசிரியராக வேண்டும் என்று இருந்தால் ஒரு வருடம் படிக்கலாம். இதுமட்டும் இல்லாமல் 4 வருடங்கள் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரு ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள்.
பி.ஏ பி.காம், பி.எஸ்.சி ஆகிய பட்டப்படிப்புகளோடு பி.எட் முடித்தவர்களும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆவார்கள். இந்த நிலையில் B.E முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம் என்று உயர் கல்வித்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏதேனும் ஒரு பாட பிரிவில் படிப்பை முடித்திருந்தால் அவர்கள் பள்ளிகளில் இயற்பியல் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம். பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.