
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இது கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி ஹிட் அடித்தது.
உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படமானது சுமார் 350 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டமானது நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் “ஹே மின்னலே” என்ற பாடல் இணையத்தில் 150 மில்லியன் அதாவது 15 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இது ஜிவி பிரகாஷின் 700 ஆவது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.