சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சிலர் எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்பதற்காக புதுவிதமான வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதன்படி இளம் பெண் ஒருவர் ஆண் , பெண் என இருவரின் குரலிலும் மாறி மாறி மேடையில் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

இவருடைய திறமையை கண்டு அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாமல் இணையவாசிகளும் வியந்து போய் உள்ளனர். கவிஞர் வைரமுத்து எழுதிய புது வெள்ளை மழை பாடலில் “பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை”என்ற வரிகளை இவர் பாடியுள்ளார். இந்தப் பாடலை ஏ ஆர் ரகுமான் இசையமைக்க பாடகர் உன்னி மேனன் மற்றும் பாடகி சுஜாதா மோகன் பாடியுள்ளனர். அவர்களுடைய குரலில் ஒரே பெண் இந்த பாடலை பாடுவது சற்று வியப்பாக உள்ளது.

https://www.facebook.com/watch/?v=25947783908168495