டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் பெண் ஒருவர் தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு அந்த பெண் மீது விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பிறகு நீதிபதிகள் கூறியதாவது, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுக்க தான் போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அது ஆணை மட்டும் தான் குறிப்பதாக சிலர் தவறுதலாக நினைக்கிறார்கள். ஆனால் அது பெண்களுக்கும் பொருந்தும். எனவே குழந்தைகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்துகளில் ஈடுபட்டால் அவர்கள் பெண்களாகவே இருந்தாலும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் பாலின வேறுபாடு இன்றி ஆண் பெண் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.