
பிரபல மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான instagram மற்றும் whatsapp போன்ற செயலிகளை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக இரு செயலிகளிலும் அடிக்கடி மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது instagram மற்றும் whatsappபில் புதிய அப்டேட்டுகளை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் முதலில் ஸ்டோரிக்கு மட்டுமே ரிப்ளை செய்யும் ஆப்ஷன் இருந்த நிலையில் தற்போது ஸ்டோரிக்கு கமெண்ட் செய்யும் ஆப்சனையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஆப்ஷன் வேண்டாம் என்று நினைக்கும் நபர்கள் அதனை Disable செய்து கொள்ளலாம். இதேபோன்று whatsappபிலும் instagram ஸ்டோரியை போன்று மியூசிக் சேர்க்கும் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. whatsapp ஸ்டேட்டஸில் instagram ஸ்டோரியை போன்று மியூசிக் சேர்க்கும் அம்சம் விரைவில் வருகிறது. அதோடு ஸ்டேட்டஸ் மூலமாக உங்கள் நண்பர்களை டேக் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். மேலும் whatsappபில் இந்த அம்சம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.