ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ்  மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் உட்பட 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கி 10 வருடங்களாகிய நிலையில் தற்போது முதல்முறையாக அவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிரஞ்சீவி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது