
இந்தியாவில் முதல் முறையாக தற்போது SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. அதாவது பெங்களூரில் SSS defence என்ற பிரபலமான ஆயுத நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி 338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த வகை துப்பாக்கிகள் 1500 மீட்டருக்கும் அப்பால் துல்லியமாக சுடக்கூடியது.
இதோடு சுமார் ரூ.413 கோடி மதிப்பிலான துப்பாக்கி குண்டுகளும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இது இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வகை துப்பாக்கிகளை பயன்படுத்த பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டுவதால் துப்பாக்கி ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சிறிய ரக துப்பாக்கிகள் முதல் மிசைல்கள் வரை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது ஏற்றுமதியும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் இந்தியாவின் ஆயுத வியாபாரம் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.