
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். அதன்படி 2023-24 ஆம் ஆண்டிற்கான மிக ஊதியம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்குவதற்காக 161 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு 3000 ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். அதன் பிறகு தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெரும் பணியாளர்கள், 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லரை செலவினத்தின் கீழ் சம்பளம் பெரும் முழு நேரம் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு 500 ரூபாய் வரையில் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.