
தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் 10 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் வீட்டுமனை போன்றவைகளுக்கு ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, மனை, விளைநிலம் போன்ற அசையா சொத்துக்களை பெண்கள் வாங்கினால் அவர்களுக்கு ஒரு சதவீதம் வரை பதிவு கட்டணம் குறைக்கப்படும்.
இந்த புதிய கட்டண குறைப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு என்று திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது பத்திரப்பதிவுக்கு ஒரு சதவீத கட்டண குறிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது