
தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை மட்டும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றால் போதும். மதியம் மேல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. இதைத்தொடர்ந்து நாளை முதல் நவம்பர் 3-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தீபாவளி பண்டிகை காரணமாக தமிழக அரசு விடுமுறை வழங்கி அறிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மாவட்டத்திலும் இன்று முதல்வர் ரங்கசாமி விடுமுறை அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும் முதல்வர் ரங்கசாமி விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டதால் தீபாவளி பண்டிகையின் காரணமாக புதுச்சேரிக்கு கிட்டத்தட்ட 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பது வந்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இத்தனை நாட்கள் விடுமுறை வந்துள்ளது மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.