பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கருடன். இந்தப் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் சூரியின் ‌ நடிப்பு பலரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‌ கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

அதன்படி நாளை அதாவது ஜூலை 3ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் கருடன் திரைப்படம் வெளியாகிறது. மேலும் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டிய நடிகர் சூரியின் நடிப்பு கருடன் படத்தில் பிரம்மிப்பாக அமைந்தது. இந்த படம் வெளியாகி ரூ‌.58 கோடி வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.