தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதே தேதியில் நடிகர் ரஜினியின் வேட்டையின் திரைப்படமும் வெளியானதால் நடிகர் சூர்யா படத்தில் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது புதிய ரிலீஸ் தேதியை பட குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாகும் எனப்பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.