தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முழுவதும் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை அறிவித்தது. அதன்பிறகு சனி மற்றும் ஞாயிறு போன்றவைகளும் விடுமுறை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த 8 நாட்களில் கிட்டத்தட்ட 5 நாட்கள் விடுமுறை வந்துள்ளது.

அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ‌ அதன் பிறகு அக்டோபர் 28, 29 மற்றும் 30 தினங்களில் மட்டும் தான் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்கள். இதைத்தொடர்ந்து அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு விடுமுறை. அதன் பிறகு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய 4 நாட்கள் விடுமுறை. மேலும் இதனால் 8 தினங்களில் கிட்டத்தட்ட 5 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.