தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் அவர் தற்போது தான் களத்திற்கு வந்துள்ளார் எனவும் ‌ அரசியல் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது எனவும் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை தெரிவிக்கிறார்கள். ஆனால் நடிகராக இருந்த போதிலிருந்து மக்களுக்காக பல்வேறு துயரமான சமயங்களில் ஓடோடி சென்று உதவியவர் நடிகர் விஜய்.

அதாவது முதல்வர் ஸ்டாலின் சென்னையின் மேயராக இருந்தபோது புயல் மற்றும் மலை போன்ற வெள்ள பாதிப்புகளால் மக்கள் துயரத்தில் இருந்த நிலையில் 100 மூட்டை அரிசிகளை வழங்கினார். இதேபோன்று மக்கள் துயரத்தில் தவித்த பல சமயங்களில் நடிகர் விஜய் பல்வேறு உதவிகளை செய்ததோடு ஒரு மாணவியை படிக்க வைத்தார். இந்த மாணவிக்கு வேலை கூட கிடைத்துள்ளது. மேலும் நடிகர் விஜய் செய்த உதவிகள் பற்றி அப்போது செய்தித்தாள்களில் வந்தவைகளை தற்போது இணையதளத்தில் வீடியோவாக வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Actor Vijay Fan Page (@vijay_officl)