தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தற்போது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆக்கபூர்வமான அரசியலை கையில் எடுத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இலக்கை நோக்கி அடைவோம். நம்முடைய அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவே நம்மை விமர்சித்தவர்கள் தற்போது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததால் இன்னும் விமர்சிப்பார்கள். அதில் ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டுமே மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற கருத்துக்களை மனதில் ஏற்றாமல் கண்டுகொள்ளாமல் அப்படியே செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக மற்றும் தீர்மானமாக உழைப்போம். நம்மை தக்க இடம் நோக்கி தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்து செல்வார்கள். அனைத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதை சாத்தியப்படுத்துதல் மட்டும்தான் என்னை நம்முடைய தீவிர அரசியலாக இருக்க வேண்டும். மேலும் பல்வேறு துரங்களில் இருந்தும் இரவு பகல் பாராமலும் வெயிலை பொருட்படுத்தியும் ‌ பலர் மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில் அவர்களுடைய இன்னல்கள் எனக்கு புரியும். மேலும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.