
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரட்டியில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம், 21 சமூகநீதி போராளிகளின் மண்டபத்தை திறந்து வைத்துள்ளார். நேற்று மாலை விழுப்புரத்திற்கு வந்த முதலமைச்சருக்கு பொதுமக்களும் திமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் ஓலக்கூரில் இருக்கும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் வழுதரட்டி கிராமத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் முதலமைச்சருக்கு பொதுமக்கள் ஆரவார வரவேற்பு அளித்துள்ளனர். அதிலும் மாணவர்கள் அப்பா அப்பா என அழைத்தபடியே முதலமைச்சருக்கு ரோஜா பூ கொடுத்து மகிழ்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.