மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் தத்தாத்ரேயா ஷெண்டே என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பிரணவ் மற்றும் குஷால் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று குஷால் தனது தந்தையிடம் கால் பாதத்தை மசாஜ் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு தந்தை மறுப்பு தெரிவித்ததால் கோவமடைந்த அவர் தந்தையை தாக்க தொடங்கினார். இதை தடுப்பதற்காக பிரணவ் முயற்சித்த போது அவரை குஷால் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த பிரணவ் வீட்டை விட்டு ஓடி சென்று அருகில் உள்ளவர்களிடம் தகவலை கூறினால்.

பின் அருகில் உள்ளவர்களுடன் பிரணவ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது தந்தை இரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கீழே மயங்கி கிடப்பதை பார்த்த அவர் அருகிலுள்ளவர்களின் உதவியோடு அவரது தந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து குஷாலை கைது செய்ததுடன் அவரிடம் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.