
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுமி கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். கூலி வேலை பார்த்து தனது தந்தை தனக்கு வாங்கி கொடுத்த செல்போனை தொலைக்க கூடாது என்று நினைத்த சிறுமி அந்த நபர்களுடன் போராடியுள்ளார்.
இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் சுமார் 350 மீட்டர் தூரம் வரை சிறுமியை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆடை கிழிந்து படுகாயம் அடைந்த சிறுமி ஒரு கட்டத்தில் செல்போனை விட்டு விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்போரை பதற செய்துள்ளது.
https://x.com/baldevksharma/status/1832642963458994548