தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று விலகியிருந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சத்தியபாமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய முதல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது தெலுங்கு சினிமாவில் முதலில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வாலுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த சமயத்தில் தெலுங்கு தெரியாது என்பதால் நடிகை காஜல் அகர்வால் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளார். அப்போது அவருடைய தந்தையும் உடன் சென்றிருந்தார். அப்போது இயக்குனர் காஜலிடம் அழுது காட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு எப்படி அழுவது என்று காஜல் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய அப்பா ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதைக் கேட்டவுடன் காஜல் உடனடியாக  கதறி அழுதுவிட்டாராம். அப்போது இயக்குனர் நீங்க ரொம்ப அழகா அழுகுறீங்க என்று கூறி படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய தந்தை என்ன சொன்னார் என்பதை அவர் கூறவில்லை.