திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இருக்கும் கிராமத்தில் 49 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவியை வீட்டில் இல்லாத நேரம் தொழிலாளி தனது மூத்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த தொழிலாளியின் மனைவி தனது கணவரை தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகும் தொழிலாளி தொடர்ந்து தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் தாயின் ஈம சடங்கில் கலந்து கொள்ள வந்த உறவினர்களிடம் சிறுமி நடந்த விஷயத்தை கூறி கதறி அழுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர்.