வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதை குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து  நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அந்நாட்டின் கலவரம் ஓய்வில்லை. ஷேக் ஹசீனா தற்போது தற்காலிகமாக இந்தியாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராடியவர்கள் தற்போது அங்குள்ள இந்துக்களை குறிவைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இந்து கோவில்கள் மற்றும் நிலங்கள் போன்றவற்றை தீ வைத்து எரித்துள்ளனர். இஸ்கான் கோயில் தாக்கப்பட்டு அங்குள்ள பகவத் கீதை போன்ற நூல்களை எரித்தனர். இதில் வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த 10 ஆண்டுகளாக போர் நடந்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தனது நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக தொடர்ந்து எதிர்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடனடியாக இந்தியாவில் உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகள் குரல் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவற்றை நடத்தினார்கள். ஆனால் நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் வாழும் இந்துக்கள் தாக்கப்படுவதை குறித்து எந்த ஒரு தலைவரும் குரல் எழுப்பவில்லை.

இந்துக்களின் உயிரும் உடைமையும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பாலஸ்தீன முஸ்லிமுக்காக “மனிதம் மறுத்து போய் விட்டதா” என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது வங்கதேசம்  இந்துகளுக்கு குரல் கொடுக்க மனமில்லை.

காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மறுக்கண்ணுக்கு சுண்ணாம்பையும் வைப்பது தான் இந்தியா கூட்டணி கட்சிகளின் பாரம்பரியம் என்று தெரிவித்துள்ளார். இதனால் வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகவே இருக்கிறது.