உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபுர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே . 24 வயதான இந்த வாலிபரை கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சனி ஞாயிறு கிழமைகளில் தான் தன்னை பாம்பு கடிப்பதாகவும் ஒன்பதாவது முறை தன்னை பாம்பு கடிக்கும்போது தான் இறந்து விடுவேன் என்றும் பீதியை கிளப்பியிருந்தார். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் அம்மாநில சுகாதார துறையினர் விகாஸ் துபே சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்பட்டார்கள் . ஆனால் அங்கு ஒவ்வொரு முறையும் அதற்கான பாம்பு கடிக்கான விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய வீட்டிலும் ஆய்வு நடத்தபட்டது.  இத்தனை ஆய்வுகளுக்கு பிறகு விகாஷ் துபே குறித்து மருத்துவ குழு அளித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அந்த அறிக்கையில், விகாஸ் துபேவை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ICUவில் உள்ள மற்றொரு பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவரின் காயத்துடன் விகாஷ் துபேயின் காயத்தை ஒப்பிட்டு பார்த்த போது அவரை ஒரே ஒருமுறை மட்டும்தான் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது மற்ற 6 முறையும் அவரை கடித்ததாக கூறப்படும் பாம்பு யாரும் நேரில் பார்க்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஸ்நேக் போபியா பாதிப்பு இருப்பதாகவும், அவருக்கு மனநல சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும்  அந்த அறிக்கையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.