பெங்களூரு விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த இந்திய ஏர்ஃபோர்ஸ் அதிகாரி விங்கள் கமாண்டர் சிலாதித்யா போஸ் மீது வழியில் தாக்குதல் நடந்ததாக அவர் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போதைய சிசிடிவி காட்சிகள் முற்றிலும் மாறுபட்டதொரு உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளன.

 

அதாவது ஒருவரை அதிகாரி தொடர்ந்து கையால் குத்தியும், உதைத்தும் கீழே விழும் வரை தாக்கும் காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மேலும் அந்த பைக்கரின் மொபைல் போனையும் கோபத்தில் அடித்து நொறுக்கினார்.

 

இதற்குமுன் தனது மனைவி ஸ்கொய்ட்ரன் லீடர் மதுமிதா போஸுடன் காரில் பயணித்த போது, ஒருவர் வழிமறித்து கன்னடத்தில் திட்டினார் என்றும், தன்னை தாக்கினார் என்றும் அதிகாரி வீடியோவில் தெரிவித்திருந்தார்.

மேலும் ஒரு நாட்டை பாதுகாப்பவருக்கு இப்படித்தான் மரியாதை கொடுப்பீர்களா என்றும் இப்படிதான் அது அனைவரும் சேர்ந்து அடிப்பீர்களா என்றும் அவர் வீடியோவில் தெரிவித்திருந்தார். ஆனால் முற்றிலும் முரண்பாடாக அவர்தான் அந்த வாலிபரை அடித்துள்ளார்.

ஆனால் சிசிடிவி காட்சிகளில் பொதுமக்கள் சிலர் நடுவில் சென்று சண்டையை சமாதானப்படுத்தும் வரை அதிகாரியே தாக்குவது போன்ற காட்சிகள் தென்படுகிறது. இது அதிகாரியின் முந்தைய வாக்குமூலங்களுடன் முரணாக உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு பெங்களூரு காவல் துணை ஆணையர் தேவராஜ் விளக்கம் அளித்தார். “இது மொழிச்சர்ச்சை அல்ல. ரோட் ரேஜ் சம்பவம் தான். பைக்கர் எதிர்வழியில் வந்தது சரிதான், ஆனால் இருவரும் சண்டையைத் தவிர்த்திருக்கலாம். சண்டையின் போது 6-7 இளைஞர்கள் சேர்ந்து இருவரையும் பிரித்தனர். அவர்கள் அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தனர்,” எனத் தெரிவித்தார். மேலும் விகாஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து விசாரணை நடைபெறுகிறது.