ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அமரன் திரைப்படம் கோடிகளில் வசூலை வாரி குவிக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வேண்டும் என்று முக்குந்த் வரதராஜனின் ஜாதி பின்னணி பற்றி சொல்லாமல் மறைத்து விட்டார்கள். இந்துவின் பின்னணியை தெளிவாக காட்டியிருக்கிறார்கள் என சிலர் விமர்சித்து வந்தனர். நேற்று அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

அப்போது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, முகுந்து வரதராஜனை தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டும் தான் காட்ட வேண்டும் என அவரது மனைவி இந்து கேட்டுக்கொண்டார். வரதராஜனின் அப்பா அம்மா வைத்த கோரிக்கையும் அதுதான். மிகுந்த தன்னை இந்தியன் என்று தான் சொல்ல ஆசைப்படுவான் தனது சான்றிதழில் கூட எந்த வித குறியீடும் இருக்கக்கூடாது என விரும்புவான். அவனுக்கு இந்தியன் தமிழன் என்கிற அடையாளத்தை மட்டும் படத்தில் கொடுங்க என முதல் முறை சந்தித்தபோது கேட்டுக் கொண்டனர் என ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.