பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐசிசி தலைவராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற 5-வது இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். அதன்பிறகு ஜெய்ஷா தன்னுடைய கல்லூரி தோழியான ரிஷா பட்டேல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர் முதல் முதலாக கடந்த 2009 ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்துதான் தற்போது ஐசிசி தலைவராக முன்னேறியுள்ளார். இவரின் முயற்சியால்தான் அகமதாபாத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உருவானது. இந்நிலையில் தற்போது ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற நிலையில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை மட்டும் 5 ஆண்டுகளுக்கு ரூ‌.48,390 கோடிக்கு விற்பனை செய்தார். இதன் மூலம்தான் உலக அளவில் ஐபிஎல் தொடர் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு ஆக மாறியது. அதோடு மகளிர் பிரீமியம் லீக் தொடங்கிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்நாட்டு போட்டிகளிலும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

இவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை டைம்ஸ் நவ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் அவருடைய சொத்து மதிப்பு 124 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.. இவர் சர்வதேச சந்திப்பு களுக்காக ஒரு நாளைக்கு ரூ.84,000 வரை சம்பளமாக பெறுகிறார். அதோடு பயணம் மற்றும் தங்கும் படி போன்றவைகளையும் பெறுகிறார். மேலும் டெம்பிள் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வரும் ஜெய்ஷா குசும் பின் சர்வர்வ் நிறுவனத்தில் 60% பங்குகளை வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.