பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, எங்கள் தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.

2026-லும் திராவிட மாடல் ஆட்சி தான். அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. உங்கள் பரிவாரங்களை எல்லாரையும் சேர்த்துட்டு வாங்க. ஒரு கை பார்ப்போம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.