அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த யுனைடெட் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பிரையன் தாம்சன்(50) கடந்த டிசம்பர் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கடந்த டிசம்பர் 10ம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் உள்ள கடையில் வைத்து இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன்(26) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து, அதை வைத்து கொலை செய்ததாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதால் மக்கள் மத்தியில் கோவம் இருந்தது. இதனால் மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் குடுத்தனர். இந்நிலையில் தான் அந்த கொலை செய்யவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் அவர் மீது கொலை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜார்ப்படுத்தப்பட்டார். இந்த இளைஞருக்கு ஆதரவாக பெண் ஒருவர் வாதாடினார். அவர் தனது கட்சிக்காரர் மனித பிங்பாங் பந்து போல் அதிகாரிகள் நடத்துவதாக கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று கூறினார். இந்த வழக்கு வருகிற 2025 பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.