
அமெரிக்க நாட்டில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அங்கு தேர்தல் நெருங்கி வருவதால் இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மஸ்க் கமலா ஹாரிசை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவார். ஒருவேளை கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் அது நிச்சயம் அமெரிக்காவிற்கு பேரழிவு தான். மேலும் என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.