
அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனும் அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கின்றார். 80 வயதாகும் இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு விருப்பம் இருக்கின்றது. ஆனால் இது குறித்து எந்த முடிவையும் நான் தற்போது வரை எடுக்கவில்லை. என்னுடைய உடல்நிலை பிரச்சனை மிகப்பெரிய தடையாக இருந்தாலும் அமெரிக்க மக்களுக்கும் நான் எப்பொழுதும் நேர்மையாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.