அமேசானில் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் ஒன்றிலிருந்து நாகப்பாம்பு வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் சார்ஜாபூர் சாலையில் உள்ள ஒரு குடும்பத்தினர் அமேசானில் எக்ஸ் பாக்ஸ் கண்ட்ரோலர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட பிறகு அந்த பெட்டியை திறக்க முயன்ற போது அதிலிருந்து நாகப் பாம்பு திடீரென வெளியானதால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த விஷப்பாம்பு பேக்கேஜிங் டேப்பிக்சிக்கி இருந்ததால் அந்த பாம்பால் வெளியேற முடியவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் இணையவாசிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.