
அமேசான் காடுகளில் ஏராளமான ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் காட்டை விட்டு திடீரென கூட்டம் கூட்டமாக வெளியே வந்தது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு அதிரவைக்கும் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அமேசான் காடுகளில் வசிக்கும் ஒரு ஆதிவாசிகள் இனம் Mancho piro என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வெளிநபர்களை முற்றிலும் தவிர்க்கும் நிலையில் சமீபத்தில் ஒரு நதிக்கரையோரம் கூட்டம் கூட்டமாக வந்து நின்றனர்.
இதற்கான காரணம் குறித்து தற்போது சமூக ஆர்வலர்கள் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது மரம் வெட்டுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழும் இடத்திற்கு அருகே வரை சென்றுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்காகவே அடர்ந்த காட்டை விட்டு திடீரென வெளியேறியுள்ளனர். அவர்கள் மரங்களை வெட்டுவதன் மூலம் காடுகளை அழிக்கிறார்கள். மேலும் பாதுகாக்கப்பட வேண்டிய அந்த பூர்வ குடி மக்களை காக்க உடனடியாக அந்த பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.