புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள படு தோல்வியால் புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கு முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஒருவருடைய அமைச்சர் பதவியை பறிப்பதற்கும் மற்றொரு அமைச்சரின் இலாகாவை மாற்றுவதற்கும் ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைப் போலவே பாஜகவிலும் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்று உள்ள திருமுருகனுக்கும் இலாகா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.