ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது.

இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு டெங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்குபடி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.