
கடலூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், கூட்டம் முடிந்து விழுப்புரத்திற்கு பொன்முடி காரில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்துள்ளார். அமைச்சர் காரின் முன்பகுதியும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் சிக்கிய நபரை அமைச்சர் பொன்முடியின் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.