தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமே விசாரிப்பதாய என அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கில் விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கை தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து யார் விசாரிப்பது என முடிவெடுக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.