உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபருபான முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா  மெர்ச்சண்ட்க்கும் கடந்த ஒன்றை வருடங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களுடைய திருமணத்திற்கு முன்பான அனைத்து வைபவங்களும் கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்து கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்களில் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் நேற்று  ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட்  திருமணம் நடந்தது. திருமணத்திற்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவருமே வரத் தொடங்கினார்கள். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மகள் சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். திருமண விழாவில் கலந்து கொண்ட திரை  நட்சத்திரங்கள் பலரும் அசத்தலாக நடனம் ஆடியுள்ளார்கள். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனம் ஆடினார். அவருடன் மணமகன் ஆனந்த் அம்பானி, அம்பானி குடும்பத்தினரும் ஆடி உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)