இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருடைய திருமணம் கடந்த 12ஆம் தேதி மிக சிறப்பாக மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதை தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி மணமக்களுக்கு சுப ஆசீர்வாத் என்னும் ஆசி வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்  தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  கலந்து கொண்டு. மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் முகேஷ் அம்பானிக்கு நினைவு பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். மேலும் இதனை தனது இணையதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.