
இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவருடைய இளைய மகன் ஆனந் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண விழா தொடங்கியது. இந்த திருமணத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடக்க இருக்கும் இந்த திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோக்கள் ஆனது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது .
இந்நிலையில் இவர்கள் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதன் பின்னர், புதுமணத் தம்பதிகளான ஆனந்த், ராதிகா ஆகியோரை மோடி ஆசிர்வதித்தார். அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு திரையுலகம், அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.