குழந்தைகள் மட்டும் இன்றி சில பெண்களும் ஜீவராசிகளுடன் எளிதாக பழகுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு பெண் சிங்கக்குட்டிகளுடன் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த பெண் நான்கு சிங்கக் குட்டிகளை ஒரு குட்டிப் பூனை போல கட்டிலில் வைத்து விளையாடும் காட்சிகள் அனைவரையும் அசர வைக்கின்றன.

இந்த வீடியோவை பதிவேற்றிய பிரிட்டிஷ் விலங்கு ஆர்வலர் ஃபிரேயா ஆஸ்பினால், பிரபல விலங்கு பாதுகாவலர் டாமியன் ஆஸ்பினால் மகள் ஆவார். அந்த சிங்கக்குட்டிகளை பணம் சம்பாதிப்பதற்காக ஒரு நபர் கடுமையாகப் பிடித்து வைத்திருந்ததை அறிந்த ஃபிரேயா, தனது குழுவுடன் அந்த குட்டிகளை மீட்டுக் கொண்டார். தற்போது அவற்றை தனது செல்லப்பிராணிகளைப் போல கவனித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Freya Aspinall (@freyaaspinall)