ஒரு வாலிபர் பங்கி ஜம்பிங் சாகசம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேசில் இந்தியாவிலேயே மிக உயரமான பங்கி ஜம்பிங் சாகசம் செய்யும் தளம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அபை டோக்ரா என்ற வாலிபர் வீல் சேருடன் 117 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் செய்துள்ளார்.

அதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோவை பார்த்த சிலர் வாலிபரின் தைரியத்தை பாராட்டியுள்ளனர். மேலும் சிலர் புகழுக்காக இப்படி உயிரை பணயம் வைப்பது தவறு என பதிவிட்டு வருகின்றனர்.