உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வியப்பூட்டும் பழக்கவழக்கங்கள் இருந்து வருகின்றன. பல வழக்கங்கள் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஆனால், உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு முக்கியமான விஷயம், ஒரு நாட்டில் உள்ள பெண்களின் அழகு பற்றியது. இந்த நாட்டின் பண்பாட்டு விதிமுறைகள் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்.

அதாவது இந்த நாடு பாகிஸ்தானிலுள்ள கலாஷ் பள்ளத்தாக்கு. இது இஸ்லாமாபாதிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கலாஷ் பழங்குடியினர், உலகிலேயே அழகான பெண்களை கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இங்கே பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு கூட, அவர்கள் வேறு ஒருவரைப் பிடித்தால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும்  உரிமையை கொண்டுள்ளனர். கலாஷ் பெண்களின் பெற்றோரும் அவர்களின் முடிவுகளை ஆதரிக்கின்றனர். இதனால், கலாஷ் பழங்குடி, பாகிஸ்தானின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.

கலாஷ் பழங்குடியினர் பார்ப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் வெளிர் நிறத்திலும், வெளிர் நீல அல்லது பச்சை நிறக் கண்களுடன் காணப்படுவதால், அலெக்சாண்டர் மகான் தலைமையிலான யவன படைவீரர்களின் சந்ததிகள் எனக் கூறப்படுகிறது. மேலும், அலெக்சாண்டரின் சேனைத்தலைவர் செல்யூகஸ் மற்றும் பாக்திரியாவின் ஆளுநராக இருந்த ஷாலக் ஷா இவர்களின் முன்னோராக கருதப்படுகிறார். கலாஷ் பெண்கள் புர்க்கா அணியாமல், சாதாரணமாக வெளியில் சென்றாலும் எந்த தடையும் இல்லாது, பிற ஆண்களுடன் பேசக்கூடிய உரிமையை பெறுகிறார்கள்.

ஆனால், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலத்தில் அவர்கள் “பஷலேனி” என அழைக்கப்படும் தனித்துவமான இடங்களில் தங்கி இருக்க வேண்டும். கலாஷ் பழங்குடியில் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவரை விட்டு வேறொருவரைத் தேர்வு செய்யலாம். ஆனால், அப்படி செய்தால், இரண்டாவது கணவர் முதல் கணவர் செலுத்திய பணத்திற்கும் இரட்டை தொகையை வழங்க வேண்டும்.