சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரது தந்தை எட்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். ஆகாஷுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அலாதி பிரியம்.

இந்நிலையில் தாயின் புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆகாஷ் ஆன்லைன் ரம்மியில் பெட் கட்டி விளையாடி தோற்றுள்ளார். இது குறித்து தெரிந்து கொண்ட ஆகாஷின் தாய் மற்றும் சகோதரர் அவரைக் கடுமையாக தீட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆகாஷ் திடீரென மாயமாகியுள்ளார். அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடி உள்ளனர். ஆனால் இறுதியாக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.