
வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 16 வயது சிறுமியை அக்கா உறவுமுறை கொண்ட பெண்ணின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அக்கா கணவர் உட்பட இருவரை கைது செய்துள்ளனர். அதாவது 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாய் தந்தையை இழந்த நிலையில் அக்கா உறவுமுறை கொண்ட ஒருவரின் வீட்டில் தங்கி இருந்து படித்து வருகிறார்.
அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னுடைய அக்கா கணவர் தான் தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார். இவருக்கு காதலன் சக்திவேலும் உடந்தையாக இருந்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பிரேம்குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.