மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அன்ஷூல் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது அன்ஷூலின் தந்தை பாபா ராவ் மதுகர் (52) மற்றும் தாய் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இதில் பாபா ராவ் தன்னுடைய மனைவியை திட்டிய நிலையில் கோபமடைந்த அன்ஷூல் ஒரு மரக்கட்டையை எடுத்து தன்னுடைய தந்தையின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த பாபா ராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன்னுடைய தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதோடு எந்த வேலைக்கும் போகாமல் இருந்ததாக வாலிபர் கூறியுள்ளார். மேலும் அனுஷூலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.