
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மத்தளம்மடையான் பகுதியில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். கணவர் பிரிந்து சென்றதால் தனது 4 வயது மகனுடன் சுதா ஆதரவின்றி தவித்தார். நேற்று முன்தினம் சுதா குளிப்பதற்காக அருகில் இருக்கும் குளத்திற்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுதா குளத்தில் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மகன் அம்மா அம்மா என கதறியபடி கிராம மக்களிடம் சென்று விஷயத்தை கூறியுள்ளார். பின்னர் கிராம மக்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுதாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.