
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருவதற்கு திமுக பகல் கனவு காண்கின்றது. அம்மா ஜெயலலிதாவின் மீது அன்பு வைத்த மக்கள் அனைவரும் தற்போதும் அவரை அம்மா என்று தான் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் திமுகவினர் தற்போது புதிதாக அப்பா வேஷம் போட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாகவே பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பெண்கள் வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிப் போய் உள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் வடக்கு மண்டல காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர். துணை ஆணையர் அலுவலகத்திலேயே இப்படி நடந்தால் வெளியில் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். திமுகவினரின் வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.