சென்னை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற அரசு நடத்துனரான கண்ணன்(68) என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில் கண்ணன் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பள்ளி ஆசிரியர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.