
சென்னை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது 13 வயது சிறுவன் 9 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக ஒரு மறைவிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் 13 வயது சிறுவன் 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 13 வயது சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.