
மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார். அவருடன் திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் வேலை செய்து வந்த நிலையில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வளர்மதி சொந்த ஊருக்கு வந்த பிறகும் ராஜ்குமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதனை அறிந்த வளர்மதியின் மகன் இருவரையும் கண்டித்த நிலையில் நேற்று வெளியே சென்று விட்டு வந்த சிறுவன் தனது வீட்டில் ராஜ்குமார் இருந்ததை பார்த்து அவரோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அவரை அழைத்துக்கொண்டு அந்தப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்திற்குச் சென்று இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது மது பாட்டிலை உடைத்து ராஜ்குமாரை சிறுவன் குத்தியுள்ளார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்தவர் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் திருவானை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.