அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று பழனியம்மாள்(95) உடல்நலக் குறைவால் காலமானார்.

இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது மறைவுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஓபிஎஸ் அவர்களின் அன்புத்தாயார் மறைந்த செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். தாயை இழந்து பெருந்துயரில் வாடும் ஓபிஎஸ். அவரது குடும்பத்தார், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல், தாயாருக்கு கண்ணீர் வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.